நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐ.மு. கூட்டணி அரசு வெற்றி!

செவ்வாய், 22 ஜூலை 2008 (19:45 IST)
தனது தலைமையிலான அமைச்சரவையின் மீது நம்பிக்கை கோரி மக்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் அரசு தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றது!

நம்பிக்கை தீர்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு பதிலளிக்க மன்மோகன் சிங் எழுந்து பேசியபோது, பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால், அவர் பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் தான் பேச தயாரித்து வைத்திருந்த அறிக்கையை அவையில் பிரதமர் தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உறுப்பினர்கள் அவர்களுடைய இருக்கையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் வாக்களித்தனர்.

முதலில் 487 உறுப்பினர்களின் வாக்குகள் பதிவானது. அவற்றில் 253 பேர் நம்பிக்கைத் தீர்மானத்திற்கு (அரசிற்கு) ஆதரவாக வாக்களித்தனர்.

தீர்மானத்திற்கு எதிராக 232 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 2 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

தற்பொழுது வாக்குச் சீட்டின் வாயிலாக வாக்களித்த உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்பிறகே இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்