காங்கிரஸ் அரசுக்கே வாக்களிப்போம் - பா.ம.க. நாடாளுமன்ற குழு தலைவர்

ஞாயிறு, 20 ஜூலை 2008 (11:58 IST)
நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் வரு‌ம் 22ஆ‌ம் தே‌தி ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்‌பி‌ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்குத்தான் வாக்களிப்போம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் எம்.ராமதாஸ் அறிவித்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து எ‌ம். ராமதா‌ஸ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், நாடாளுமன்றத்தில் 22-ந் தேதி நடைபெற இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியின் 6 உறு‌ப்‌பின‌ர்களு‌ம் வாக்களிக்க இருப்பதாக உண்மைக்கு புறம்பான செய்திக‌ள் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டன. இது ‌மிகவு‌ம் துர‌திரு‌ஷ‌்டவசமானது.

இதுது கு‌றி‌த்து தெ‌ளிவுபடு‌த்துவத‌ற்காகவே இ‌ந்த அ‌றி‌க்கையை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளே‌ன். அத‌ன்படி, அனைத்து பா.ம.க. நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களு‌ம், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கே வாக்களிப்பார்கள் என்பதை பா.ம.க. நாடாளுமன்ற குழு‌த் தலைவர் என்ற முறையில் தெரிவித்து கொள்கிறேன்.

2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தொடங்கப்பட்டதில் இருந்தே பா.ம.க. அதில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. அது பயணித்தாலும், மூழ்கினாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்தான் இருப்போம். அணுசக்தி ஒப்பந்தத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் எ‌ன்று எம்.ராமதாஸ் கூறியிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்