ஊழல் என்பது ஏதோ ஒரு சாரார் கொடுப்பதும், மற்றொரு சாரார் வாங்குவது மட்டுமில்லை. அது ஒரு சங்கிலித் தொடர் போல நமது சமூதாயத்தின் கைகளைக் கட்டிப்போட்டுள்ளது.
உலக அளவில் ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 74வது இடத்தில் இருப்பதாக தமிழ்.வெப்துனியா.காமில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்தச் செய்தியைப் படித்த வாசகர் டாக்டர் ஜி.வி. ராஜ் என்பவர் ஊழல் பற்றி அனுப்பியுள்ள மின்னஞ்சல் செய்தியை இங்கு வழங்கியுள்ள§ம்.
ஊழல் ஒரு வட்டப்பாதை. பொதுமக்கள் விழித்துக் கொள்ளாமல், நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்காமல், காவல்துறை கட்டுப்படுத்தாமல் இந்த ஊழல் எனும் பேய் நம்மை விட்டு அகலாது.
காவல் நிலையம் வரும் பொதுமக்களிடம் வாங்கும் லஞ்சப் பணத்தைக் கொண்டு போய் தனது மகனுக்கு கல்வி நிறுவனத்தில் இடம் வாங்க லஞ்சமாகக் கொடுக்கிறான் காவல் அதிகாரி.
காவல் அதிகாரி போன்று இருக்கப்பட்டவர்களிடம் வாங்கிய பணத்தை, தனது கல்வி நிறுவனத்திற்கு அனுமதி வாங்க மத்திய அல்லது மாநில அமைச்சரிடம் லஞ்சமாக வழங்குகிறது கல்வி நிர்வாகம்.
தான் லஞ்சமாகப் பெற்ற பணத்தை, தேர்தல் மற்றும் தேர்தலில் நிற்பதற்கு (பொதுமக்களுக்கு சேவையாற்ற) அரசியல் கட்சிக்கு லஞ்சமாகக் கொடுக்கிறான் அரசியல்வாதி.
அரசியல்வாதிகளிடம் இருந்து பெற்ற பணத்தை தேர்தலில் வாக்கு பெறுவதற்காக பொதுமக்களுக்கு லஞ்சமாகக் கொடுக்கிறது அரசியல் கட்சி.
பொதுமக்கள் அப்பணத்தை மீண்டும் ஏதோ ஒரு அரசுசார் அதிகாரியின் கைகளில் லஞ்சமாகக் கொடுத்து மகிழ்கின்றனர்.
இப்படி இருக்கும்போது இந்த தொடர் சங்கிலித் திட்டத்தில் யாரை குறை கூறுவது.
முறையான கல்வி, நிர்வாகம், சரியான அணுகுமுறை ஆகியவைதான் நமது சமூதாயத்தை இந்த லஞ்ச லாவண்யத்தில் இருந்து காப்பாற்றும்.