அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டி‌ற்கு ‌சிவசேனை ஆதரவு!

புதன், 25 ஜூன் 2008 (20:31 IST)
இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பா‌ட்டி‌ற்கு ‌சிவசேனை‌ததலைவ‌ரபா‌லதா‌க்கரஆதரவதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

அமெரிக்காவுடனாஅணுசக்தி உட‌ன்பாடஇந்தியாவுக்கு மிகவும் பயன்தரக் கூடியது. இதை அனைத்து அரசியல் கட்சிகளும் புரிந்து கொண்டுள்ளன. ஆனால் இடதுசாரிகள் மட்டும் புரிந்து கொள்ள மறுக்கின்றனர் என்று சிவசேனை கட்சிப் பத்திரிகையான "சா‌ம்னா' வின் தலைய‌ங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இந்தியா நலன் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை சீனாவின் நலனே பிரதானம் என்று கருதியே இடதுசாரிகள் இந்திய- அமெரிக்க அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டஎதிர்த்து வருகின்றனர். இந்தியாவுக்கு தீங்கு ஏற்படும் என்றாலும் கூட பரவாயில்லை ஆனால் சீனாவுக்கு விசுவசமாக இருக்க வேண்டும் என்ற ரீதியில் இடதுசாரிகளின் போக்கு உள்ளது.

அணுசக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிகள் இந்த அளவுக்கு எதிர்ப்பதற்கு சீனா மீது அவர்கள் வைத்துள்ள அதீத பற்றே காரணம். அதனால் தான் அமெரிக்காவுக்கு இந்தியாவுக்கும் இடையே உறவை மேம்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் அவர்கள் எதிர்க்கின்றனர்.

இந்த விஷயத்தில் அரசு உறுதியான ஒரு முடிவு எடுக்க வேண்டும். அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையென்றால் ஆட்சியைத் துறக்க வேண்டும்" என்றசாமனா‌வி‌லகூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்