இது தொடர்பாகக் கர்நாடகச் சட்டப் பேரவையில் நடந்த விவாதத்தில் பேசிய முதல்வர் எடியூரப்பா, மத்திய அரசு, உறுதியளித்தபடி உரங்களை விநியோகித்திருந்தால் மாநில அரசுக்கு இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்காது. விவசாயிகளும் வீதிகளில் இறங்கி போராடியிருக்க மாட்டார்கள் என்றார்.
உரங்களை உடனடியாக விநியோகிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும். அதற்கு மத்திய அரசுதான் முழு பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றார் அவர்.
டைஅம்மோனியம் பாஸ்பேட் உரத்தை 1.10 லட்சம் டன்கள் ஒதுக்குவதாக மத்திய அரசு உறுதியளித்திருந்தது. ஆனால் 70,436 டன்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டது என எடியூரப்பா கூறினார்.