கிரீமி லேயருக்கான வருமான வரம்பு ரூ. 4- 6 லட்சம்!
புதன், 25 ஜூன் 2008 (15:28 IST)
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுப் பலன்களில் இருந்து நீக்கப்பட உள்ள கிரீமி லேயர் பிரிவினருக்கான அதிகபட்ச ஆண்டு வருமானம் 4 முதல் 6 லட்சம் ரூபாய் என்று தேசியப் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இந்த வருமான வரம்பு கடந்த ஆண்டு ஆண்டிற்கு ரூ.2.5 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசியப் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் தனது பரிந்துரைகளை நாளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது என்று அரசு வட்டாரங்கள் கூறியதாக யு.என்.ஐ. செய்தி தெரிவிக்கிறது.
ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் நாளை மதியம் மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் மீரா குமாரைச் சந்தித்துத் தனது பரிந்துரைகளை வழங்க உள்ளனர்.