பணவீக்கத்தை கட்டுப்படுத்த மன்மோகன் சிங் அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சோனியா காந்தி, விலை உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பதுக்கல்காரர்கள், கள்ளச் சநதை வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் பொதுக் கூட்டத்தில் பேசும் போது,. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தி மாநில அரசுகள் வரிகளை குறைக்காமல் மத்திய அரசு மீது குற்றம் சுமத்துகின்றன. மாநில அரசுகள் பதுக்கல்காரர்கள், கள்ளச் சந்தை வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து மக்களின் சுமைகளை குறைக்க வேண்டும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விலை உயர்வால் ஏற்படும் பிரச்சனையை உணர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று சோனியா காந்தி கூறினார்.