இமாச்சல பிரதேசத்தில் இன்று நடந்த சாலை விபத்தில் 16 பேர் பலியானார்கள். 6 பேர் காயமடைந்தனர்.
பஸாரி என்ற இடத்திலிருந்து ராம்பூர் என்ற இடம் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
சிம்லா மாவட்டம் பட்ராஸ் கைன்சி மோர் என்ற இடத்தில் இன்று காலை 7.45 மணியளவில் பேருந்து வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக அந்த பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே பலியானார்கள். 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்தவுடன் காவல்துறையினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.