சிக்கிம் : பெ‌ட்ரோ‌ல் விற்பனை வரி குறைப்பு!

சனி, 7 ஜூன் 2008 (13:39 IST)
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படாத வகையில், சிக்கிம் மாநில அரசு விற்பனை வரியை குறைத்துள்ளது.

இந்த வரி குறைப்பால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2ம், டீசலுக்கு ரூ.1.40 பைசா குறையும்.

மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ.5 உயர்த்தியதால் சிக்கிமில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.52.55 பைசாவாகவும் அதிகரித்தது. இதன் விலை மாநில அரசின் வரி குறைப்பால் ரூ.50.55 ஆக குறைந்துள்ளது.

இதேபோல் டீசலின் விலை ரூ.37.20 இல் இருந்து ரூ.35.80 ஆக குறைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்