ராஜஸ்தான் ரயில் போக்குவரத்து சீரடைகிறது!

சனி, 7 ஜூன் 2008 (13:27 IST)
குஜ்ஜார்கள் இனம் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கக்கோரி நடத்திய ஆர்பாட்டங்களில் நின்று போன ரயில் போக்குவரத்துகள் ராஜஸ்தான் மாநிலத்தில் மெல்ல இய‌ல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

தலைநகர் டெல்லி மற்றும் ராஜஸ்தான் இடையே ரயில் போக்குவரத்து துவங்கியது. மேலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 ரயில்கள் இன்று முதல் இயங்கத் துவங்கியுள்ளதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அகமதபாத்-ஹரித்வார் விரைவு ரயில், டெல்லி-ஜோத்பூர் விரைவு ரயில், புது டெல்லி-அகமதாபாத் ராஜதானி விரைவு ரயில், போர்பந்தர்-டெல்லி விரைவு ரயில், ஜெய்பூர்-அமிர்தசரஸ் விரைவு ரயில் ஆகியவை இன்று முதல் ஓடுகின்றன.

ஆனால் ராஜஸ்தான் கோட்டா பிரிவில் ரயில் போக்குவரத்து தொடங்க இன்னும் சில நாட்கள் ஆகும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்