கேரளா‌வி‌ல் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

சனி, 7 ஜூன் 2008 (11:11 IST)
கேரள மாநில அரசு விற்பனை வரியை குறைத்துள்ளதா‌ல், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.22 பைசா, டீசலுக்கு ரூ.0.66 பைசா விலை குறைந்துள்ளது.

பெட்ரோலுக்கு முன்பு 29.01 விழுக்காடும், டீசலுக்கு 24.69 விழுக்காடும் விற்பனை வரி விதிக்கப்பட்டு வந்தது.

இதை தற்போது பெட்ரோலுக்கு 26.03 விழுக்காடாகவும், டீசலுக்கு 22.49 விழுக்காடாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இநத விற்பனை வரி குறைத்திருப்பதால், மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், மாநில அரசுக்கு விற்பனை வரி மூலம் கிடைக்கும் உபரி வருவாய” மட்டுமே குறையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்