கிஷன் கங்கா, ஓரி : இந்தியா – பாக். பேச்சுவார்த்தை!

சனி, 31 மே 2008 (17:00 IST)
சீனாப் நதியின் மீது இந்தியா கட்டியுள்ள கிஷன் கங்கா மற்றும் ஓரி இரண்டு ஆகிய அணைகள் கட்டியது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

லாகூர் நகரில் இன்று நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் சிந்து நதி நீர்ப் பகிர்வு ஆணையர் ஜி. அரங்கநாதன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு, பாக்.கின் சிந்து நதி நீர்ப் பகிர்வு ஆணையர் சையது ஜமாத் அலி ஷா தலைமையிலான குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பக்ளிஹார் அணைப் பிரச்சனைக்கு சர்வதேச நிபுணர் அளித்த ஆலோசனையின்படி தீர்வு எட்டப்படும் நிலை உள்ளதால், இந்தப் பேச்சுவார்த்தையில் அப்பிரச்சனை விவாதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் கிஷன் கங்கா மற்று‌ம் ஓரி இரண்டு ஆகிய இரண்டு பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்