சோ‌னியா கா‌ந்‌தி‌க்கு ப‌ீகா‌ர் ந‌ீ‌திம‌ன்ற‌‌ம் ச‌ம்ம‌ன்!

வியாழன், 22 மே 2008 (20:32 IST)
இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ப‌ீகார் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

வழக்கறிஞர் சுதிர் ஓஜா தொடர்ந்த வழக்‌‌கி‌ல், முசாபர்பூர் விரைவு நீதிமன்ற நீதிபதி விஜய்குமார் மண்டல் அனு‌ப்‌பியு‌ள்சம்ம‌னி‌ல், ஜூன் 26-ஆம் தேதி சோனியா காந்தி, உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா, முராதாபாத் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அஜய் தலேஷ்வர் சோனி ஆகியோ‌ஆஜராவே‌ண்டு‌மஎ‌ன்றஉத்தரவிடப்பட்டுள்ளது.

மு‌ன்னதாவழக்கறிஞர் ஓஜா தா‌க்க‌லசெ‌ய்து‌ள்மனு‌வி‌ல், "௦௦௦௦௦௦௦௦௦௦உத்தரப் பிரதேசத்தில் உள்ள முராதாபாதில் 21-6-2007 ல் காங்கிரஸ் அலுவலக சுவரில் சோனியா காந்தியை துர்கை கடவுள் போல சித்தரித்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணாவின் ஒத்துழைப்புடன் இந்த சுவரொட்டியை தயாரித்துள்ளார் அஜய் தலேஷ்வர். இதற்கு சோனியா காந்தியும் உடந்தையாக இருந்திருக்கிறார்.

இந்துக்கள் வேதனைப்படும் விதத்தில் இந்த சுவரொட்டி பத்திரிகைகளிலும் தொலை‌க்கா‌ட்‌சி‌யிலும் வெளியானது. இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதற்காக அவர்களை தண்டிக்க வேண்டும் எ‌ன்று" கூறப்பட்டிருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்