பிரதமர் மன்மோகன்சிங் 2 நாள் பயணமாக பூட்டான் சென்றுள்ளார். அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் உரையாற்றுகிறார்.
பூட்டான் அரசுடன் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தையில் எரிசக்தி ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிகிறது.
உலகின் இளம் ஜனநாயகம் என்று அழைக்கப்படும் பூட்டான் நாட்டு நாடாளுமன்றத்திற்கு முதன் முதலில் வருகை தரும் சர்வதேசத் தலைவராவார் மன்மோகன் சிங்.
பூட்டான் அரசர் ஜிக்மி கேசர் நம்கியால் வாங்சுக்கையும், பிரதமர் ஜிக்மி தின்லீ ஆகியோரையும் சந்திக்கும் பிரதமர் இருநாட்டு தேசிய நலன்களையும் கருதி உறவுகளை மேம்படுத்துவது குறித்து வலியுறுத்தவுள்ளதாக தெரிவித்தார்.