பாகிஸ்தானில் தூக்கு தண்டனை பெற்ற இந்தியரான சரப்ஜித் சிங்கின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கூடாது என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக செய்தி ஊடகம் ஒன்று கூறியுள்ளது.
பாகிஸ்தானில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சரவை மரண தண்டனையை முற்றிலும் அகற்றி அதனை ஆயுள் தண்டனையாக குறைக்கும் சட்டத்தை அமல்படுத்தவுள்ளதாக முன்பு கூறப்பட்டது.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் நடத்திய உயர்மட்ட கூட்டம் ஒன்றில் சரப்ஜித் சிங் விவகாரம் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், சட்ட மற்றும் மனித உரிமை அமைச்சக அதிகாரிகள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அப்போது சரப்ஜித் சிங் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தால், அது தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக அமையும் என்ற கருத்தை உள்துறை அமைச்சகம் எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.