ஏவுகணைத் திட்டத்தி‌ற்கு தலைமையே‌ற்ற முதல் பெண்மணி!

செவ்வாய், 13 மே 2008 (16:06 IST)
இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் பணியாற்றும் 45 வயது பெண்மணி டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அணுத் திறன் ஏவுகணைத் திட்டத்தின் தலைவர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏவுகணைத் திட்டத்தின் இந்த தலைமைப் பொறுப்பிற்கு முதன் முதலாக ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 3000 கிமீ. இலக்குகளை சென்று தாக்கும் அக்னி ஏவுகணைத் திட்டத்தில் உதவி திட்ட இயக்குனராக இருந்து வரும் டெஸ்ஸி தாமஸ் அணுத்திறன் வாய்ந்த அக்னி ஏவுகணைத் மேம்பாட்டுத் திட்டத்தில் திட்ட இயக்குனராக நிமிக்கப்பட்டுள்ளார்.

அக்னி திட்டத்தில் உள்ள அனைவரையும் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கவுரவித்தார். இந்த திட்டம் குறித்து டெஸ்ஸி தாமஸ் கூறுகையில் "இதுவும் ஒரு ரகசியமான திட்டம்தான், இது அக்னி-2 என்று அழைக்கப்படுகிறது. தேசத்தின் பாதுகாப்பில் எனது பங்கு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்