ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கட்சித் தலைவர், அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஐம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள காலி மாண்டி என்ற இடத்தில் தீவிரவாதிகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்திய தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஹோஷியார் சிங் என்பவரின் வீட்டை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் ஹோஷியார் சிங், அவரது மனைவி செஷி பெல்லா ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் அவரது இரண்டு மகள்களும் இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த பாதுகாப்பு படையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று தீவிரவாதிகளை சுற்றிவளைத்தனர். அப்போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.
இந்த சண்டையை படம்பிடித்துக் கொண்டிருந்த உள்ளூர் பத்திரிகை புகைப்படக்காரர் ஒருவர் தலையில் குண்டுபாய்ந்து பலியானார்.