கோத்ரா ரயில் எரிப்பு அதன் பிறகு வெடித்த குஜராத் கலவரங்கள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நானாவதி குழுவில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அக்க்ஷய் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு இருந்த நீதிபதி கே.ஜி.ஷா காலமானதால் இவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
குஜராத் கலவரங்கள் நடந்த 2002ஆம் ஆண்டு இந்த குழுவை குஜராத் மாநில அரசு நியமித்தது.
முதலில் கோத்ரா ரயில் எரிப்பு பற்றிய விசாரணைக்காக நீதிபதி கே.ஜி.ஷாவை மட்டுமே குஜராத் மாநில அரசு நியமித்தது. பிறகு நீதிபதி ஜி.டி. நானாவதி தலைமையில் இரு நபர் விசாரணைக் குழுவாக மாற்றப்பட்டது. அப்போது குஜராத் கலவரங்கள் குறித்த விசாரணையும் இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 6 ஆண்டுகளாக இந்த விசாரணையை நானாவதி குழு நடத்தி வருகிறது. இந்நிலையில் நீதிபதி கே.ஜி.ஷாவின் மறைவிற்குப் பிறகு அக்க்ஷய் மேத்தா தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.