வாரத்திற்கு 60 மணி வேலை நேரமாக உயர்த்த பரிந்துரை!
வியாழன், 28 பிப்ரவரி 2008 (16:27 IST)
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள 2007-08 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை ஏலத்தில் விடுவது, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிப்பது, தற்போது வாரத்திற்கு 48 மணி நேரமாக உள்ள வேலை நேரத்தை 60 மணி நேரமாக அதிகரிப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது.
இந்திய தொழிற்சாலை சட்டத்தில் பணி நேர பற்றாக்குறையினால் உற்பத்தி குறைவதைத் தவிர்க்க வாரத்திற்கு 48 மணிநேரமாக உள்ள வேலை நேரத்தை 60 மணி நேரமாக உயர்த்தவும், அதேநேரத்தில் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரத்திற்கு மிகாமல் பணி நேரத்தை நீட்டித்துக் கொள்ள வகைசெய்யும் சட்ட திருத்தம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
வங்கிகள்,எண்ணெய் நிறுவனங்கள், நகர போக்குவரத்து, இரயில்வே, மின்சாரம், நிலக்கரி, சில்ரை வணிகம் உள்ளிட்ட துறைகளில் விரிவான அளவில் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.