நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால் முதலில் பகல் 12 மணி வரையும் பிறகு நாள் முழுவதும் இரு அவைகளும் தள்ளி வைக்கப்பட்டன.
மக்களவை இன்று காலை கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவசாயிகள் தற்கொலை, கடன் பிரச்சனையை எழுப்பினர். இதையடுத்து அவையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது.
தொடர்ந்து கூச்சலும், குழப்பமும் நிலவியதால், சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி நண்பகல் 12 மணி வரையும் பிறகு நாள் முழுவதும் அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இதேபோல் மாநிலங்களவையிலும் இதே பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நண்பகல் 12 மணி வரையும் பிறகு நாள் முழுவதும் தள்ளி வைக்கப்பட்டது.