பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நவீன் சந்திர ராம்கூலன், "பிகார் மக்கள் மீது நான் மிகுந்த அன்பு வைத்துள்ளேன். நிதிஷ்குமார் அரசு எங்கள் மூதாதையர் வாழ்ந்த கிராமத்தை முன்னேற்ற வேண்டும். அதற்கு எல்லா உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். இந்த கிராமத்தில் உள்ள சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகளை மேம்படுத்த ரூ.1 கோடி நிதி தருகிறேன். மேலும் பிகாரைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளேன்" என்றார்.
முன்னதாக ராம்கூலனை வரவேற்ற முதல்வர் நிதிஷ்குமார், ஆளுநர் ஆர்.எஸ்.கவாய் ஆகியோர், அவரின் வருகையின் மூலம் இருதரப்புச் சமூக, பொருளாதார உறவுகள் வலுப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.