பெட்ரோல் விலை உயர்வு: அமைச்சரவை இன்று பரிசீலனை!
வியாழன், 14 பிப்ரவரி 2008 (11:15 IST)
பெட்ரோல ், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து அமைச்சர்கள் குழு வழங்கியுள்ள பரிந்துரைகளின் மீத ு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று கூடவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல ், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்த வேண்டும் என்று பெட்ரோலிய நிறுவனங்கள் விடுத்துள்ள கோரிக்கை பற்றி முடிவெடுப்பதற்கா க, மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு பலமுறை கூடி விவாதித்தது. இருந்தாலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரையும ், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.1 முதல் ரூ.2 வரையும் உயர்த்துவதற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதேநேரத்தில ், பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோர ா, அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜ ி, வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் ஆகியோர் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், விலை உயர்வுக்குப் பதிலாக வரிகளைக் குறைப்பது போன்ற மாற்று வழிகள் சிலவற்றை அமைச்சர்கள் முரளி தியோர ா, பிரணாப் முகர்ஜி ஆகியோர் பரிந்துரைத்தனர். ஆனால ், இதற்கு மற்ற அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இவ்வாறு குழப்பமான சூழல் நிலவியதால், விலை உயர்வு குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை மத்திய அமைச்சரவையிடம் ஒப்படைப்பதாக அமைச்சர்கள் குழு அறிவித்தது. இந்தப் பரபரப்பான சூழலில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை நடக்க உள்ளது. அதன் பிறகு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெறும். அப்போது பெட்ரோலியப் பொருள்களின் விலைஉயர்வு குறித்து பரிசீலிக்கப்படும். பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு உயர்த்தப்படவில்லை. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஆண்டு பீப்பாய்க்கு 67 டாலர்கள் என்ற அளவில் இருந்தது. இந்த ஆண்டு 92 டாலர்கள் அளவுக்கு உயர்ந்துவிட்டது.
செயலியில் பார்க்க x