சப‌‌ரிமலை: அரவணை‌ப் ‌பிரசாத‌த் த‌ட்டு‌ப்பா‌ட்டை ‌நீ‌க்க நடவடி‌க்கை!

வியாழன், 14 பிப்ரவரி 2008 (11:13 IST)
சப‌ரிமலஅ‌‌ய்ய‌ப்ப‌னகோ‌யிலு‌க்கு‌ப் பூஜகால‌ங்க‌‌ளி‌ல் வரு‌ம் ப‌க்த‌ர்களு‌க்கு‌த் த‌ட்டு‌‌ப்பாடி‌ன்‌றி அரவணை‌ப் ‌பிரசாத‌மவழ‌ங்தேவச‌மவா‌ரிய‌மஏ‌ற்பாடசெ‌ய்து‌ள்ளது.

"பங்குனி மாத பூஜை, பங்குனி ஆராட்டுத் திருவிழா, சித்திரை விஷு விழா என அடுத்தடுத்து தொடரு‌‌ம் விசேஷங்களு‌க்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவர். அவ‌ர்க‌ள் எத்தனை அரவணைப் பிரசாத டின்கள் கேட்டாலும், வழங்குவதற்குத் தேவையான ஏ‌ற்பாடுகளை‌த் தேவஸம் வா‌ரிய‌ம் செய்துள்ளது" எ‌ன்று சபரிமலை உதவி ஆணையர் கோதவர்மா தெரிவித்தார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில், கடந்த மண்டல பூஜையின்போது, அரவணைப் பிரசாதம் தயாரித்து வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டதா‌‌ல், பெரும்பாலான பக்தர்கள் பிரசாதம் இல்லாமல் திரும்பினர். அரவணைப் பிரசாத டின்கள் போதுமான அளவு இருப்பு இல்லாததாலும், இந்த டின்களைத் தயாரிப்பதற்கு புதிய நிறுவனத்துக்கு தேவஸம் போர்டு அனுமதி வழங்கியதாலும் இப்பிரச்சனை ஏற்பட்டதாக கூற‌ப்ப‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்