நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்த ரூ.1,798 கோடி : மத்திய அரசு அனுமதி!

வியாழன், 14 பிப்ரவரி 2008 (11:02 IST)
த‌மிழக‌‌மஉ‌ள்‌ளி‌ட்ட 7 மா‌நில‌ங்க‌ளி‌ல் ‌நில‌த்தடி ‌நீ‌ரம‌ட்ட‌த்தமே‌ம்படு‌த்து‌வத‌ற்காூ.1,798 கோடி ம‌தி‌‌ப்‌பிலான ‌தி‌ட்ட‌த்து‌க்கம‌த்‌திஅரசஅனும‌தி அ‌ளி‌த்து‌ள்ளது.

தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகம், மரா‌ட்டிய‌ம், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்தும் திட்ட‌த்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. மொத்தம் ரூ.1,798.71 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் கட்டுமானப் பணிகளுக்கு மானியமாக ரூ.1,499.27 கோடி வழங்கப்படும்.

குறு, சிறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும் மற்ற விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியமும் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும். கடினமான பாறைகளுடைய பகுதிகளில் உள்ள பயனாளிகளின் கிணறுகள் மூலம் செயற்கை முறையில் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்த இத்திட்டம் வகை செய்கிறது.

இத்திட்டத்தின் கீழ் 44 லட்சத்து 50 ஆயிரம் ‌விவசாய‌ககிணறுகள் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்து‌பணிக்காக எடுத்துக் கொள்ளப்படும். பருவ மழை துவங்குவதற்கு முன்பு இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்