சபரி மலை கோயிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் : கேரள அரசு!

வியாழன், 7 பிப்ரவரி 2008 (20:29 IST)
சபரி மலை சுவாமி ஐயப்பன் கோயிலிற்குச் சென்று வழிபட பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதே தங்களுடைய நிலைப்பாடு என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது!

வழிபாட்டுத் தலம் ஒன்றில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது நியாயம் ஆகாது என்று அந்த வாக்குமூல மனுவில்¨ கூறியுள்ள கேரள அரசு, கோயில்களுக்குள் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே தங்களுடைய கொள்கை என்று கேரள அரசு கூறியுள்ளது.

சபரி மலையில் உள்ள சுவாமி ஐயப்பன் கோயிலிற்கு அந்தக் காலத்தில் இருந்தே பெண்கள் அனுமதிக்கப்படாததற்குக் காரணம், அது அடர்ந்த வனப் பகுதியில் இருப்பதனால்தான் என்றும், அது அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்காது என்பதாலும் கடைபிடிக்கப்பட்டு வந்ததாக அந்த மனுவில் கேரள அரசு கூறியுள்ளது.

ஆனால், சபரி மலைக் கோயில் நிர்வாகம் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று மனு தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்