சுவாச கோளாறு காரணமாக டெல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா இன்று காலை வீடு திரும்பினார்.
கடந்த புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் சுவாச கோளாறு காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
கடந்த 5 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோனியா காந்தி, இன்று அதிகாலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
சுவாச கோளாறு பாதிப்பிலிருந்து சோனியா முழு குணமடைந்ததை தொடர்ந்து இன்று காலை வீடு திரும்பியதாகவும், எனினும் தொடர்ந்து ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கங்காராம் மருத்துவமனையின் தலைவர் பி.கே.ராவ் தெரிவித்துள்ளார்.