மராட்டியத்தின் விதர்பா பகுதியில் கடந்த 2007-ஆம் ஆண்டில் 1,200 விவசாயிகள் தற்கொலை செய் திருப்பதாக விதர்பா ஜான் அண்டோலன் சமிதி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக மார்ச்சில் 113 பேரும், செப்டம்பரில் 112 பேரும், ஜுனில் 82 பேரும், ஜூலையில் 75 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.
இப்பகுதி விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2006 ஜூலையில், 3750 கோடி ரூபாய் ஒதுக்கினார். இருந்தாலும், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
11 மாவட்டங்களை உள்ளடக்கிய விதர்பா பகுதி கடந்த சில ஆண்டுகளாக வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளதால், அப்பகுதி விவசாயிகள் வறுமையில் தவிக்கின்றனர். இதிலிருந்து மீளமுடியாத விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக தன்னார்வ தொண்டு அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.