தேசிய கட்டுமான சட்டம்: மத்திய அரசு பரிசீலனை!

Webdunia

சனி, 29 டிசம்பர் 2007 (17:05 IST)
கட்டுமானத் துறை தொடர்புடைய சட்டங்களை ஒன்றிணைத்து தேசிய அளவிலான கட்டுமானச் சட்டத்தை உருவாக்க மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் வேங்கடபதி கூறினார்.

இது தொட‌ர்பாக திருச்சி‌யி‌ல் நட‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌ன்‌றி‌ல் அமைச்சர் வேங்கடபதி பேசியதாவது:

உலகின் பொருளாதார வளர்ச்சியில் கட்டுமானத்துறையின் பங்குதான் முதலிடம் வகிக்கிறது. உலக அரங்கில் இந்திய பொருளாதாரம் தற்போது 8 ‌விழு‌க்காடாக முன்னேற்றம் கண்டுள்ளது. இது நீடிக்க வேண்டும்.

கட்டுமான துறையில் உள்ள பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், கட்டுநர்கள் என ஒவ்வொருவரும் தொழில் ரீதியாக ஒவ்வொரு சட்டத்தை பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது. எனவே, கட்டுமானத் துறை தொடர்புடைய 12 சட்டத்தையும் ஒரே குடையின் கீழ், ஒற்றை சாளர முறையில் கொண்டு வந்து 'தேசிய கட்டுமான சட்டம்' என மாற்றியமைக்க மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.

இதுபற்றிய கருத்துக்கள் சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களிடம் கேட்கப்பட்டு வருகிறது. எல்லா மாநிலங்களும் பின்பற்றும் வகையில் இந்த சட்டம் அமைக்கப்படும் எ‌ன்றா‌ர் வேங்கடபதி.

வெப்துனியாவைப் படிக்கவும்