பெனா‌சி‌ர் படுகொலை ஜனநாய‌த்‌தி‌ற்கு அ‌தி‌ர்‌ச்‌சி: வா‌‌ஜ்பா‌ய்!

வெள்ளி, 28 டிசம்பர் 2007 (11:41 IST)
பெனா‌சி‌ர் பு‌ட்டோ படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்டத‌ற்கு‌க் கடு‌ம் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் அட‌ல் ‌பிகா‌ரி வா‌ஜ்பா‌ய், இ‌ப்படுகொலை நாக‌ரிக சமூக‌த்‌தி‌ற்கு‌ம், ஜனநாயக‌த்‌தி‌ற்கு‌ம் ‌மிக‌ப்பெ‌ரிய அ‌தி‌ர்‌ச்‌சியை‌த் த‌ந்து‌ள்ளது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ஜனநாயக‌த்தை ‌மீ‌ண்டு‌ம் ‌நிலை‌நிறு‌த்துவத‌ற்காக கடுமையாக‌ப் போராடு‌ம் நோ‌க்க‌த்துட‌ன் பெனா‌சி‌‌ர் பு‌ட்டோ நாடு ‌திரு‌ம்‌பினா‌ர் எ‌ன்று தனது இர‌ங்க‌ல் செ‌ய்‌திய‌ி‌ல் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ள வா‌ஜ்பா‌‌ய், பய‌ங்கரவாத‌ம் எ‌ன்பது ஒரு நா‌ட்டை‌‌ச் சா‌ர்‌ந்தது ம‌ட்டும‌ல்ல என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

அமை‌தியான அ‌ன்பு ‌நிறை‌ந்த சமூக‌ம், ஜனநாயக‌ம் ஆ‌கியவ‌ற்று‌க்கு பய‌ங்கரவாத‌ம் ஒரு ‌மிக‌ப்பெ‌ரிய சவாலாக உ‌ள்ளது. அத‌ற்கெ‌திராக நா‌ம் அனைவரு‌ம் ஒ‌ன்றுப‌ட்டு‌‌ப் போராட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்