காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் பல்னு கிராமத்தில் உள்ள மசூதிக்குள் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க தீவிரவாதிகள் 3 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகுந்தனர். அங்கு தொழுகை முடிந்து வந்து கொண்டிருந்த 5 பேரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் மசூதியை சுற்றி வளைத்தனர். நீண்ட நேரம் நடந்த சமாதான முயற்சிக்குப் பிறகு, நேற்று பிற்பகலில் 3 பேரை தீவிரவாதிகள் விடுவித்தனர்.
பின்னர் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. இதில் தீவிரவாதிகள் 3 பேரும் பலியானார்கள். அவர்கள் பிடியில் மீதம் இருந்த 2 பிணைய கைதிகளும் உயிருடன் மீட்கப்பட்டனர்.