86,000 வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி

ஞாயிறு, 23 டிசம்பர் 2007 (16:00 IST)
மணிநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 86,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மணிநகரில் நடந்து முடிந்த 20 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் நரேந்திர மோடி 1,38,668 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தின்ஷா பட்டேல் 52,339 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

குஜராத்தில் அருதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நரேந்திரடி மோடி தலைமையிலான பாஜக 114 இடங்களைப் பிடித்துள்ளது.

இதையடுத்து 3வது முறையாக நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்பது உறுதியாகிவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்