ரயில்வே நிதிநிலை அறிக்கையில உபரி நிதி, நிகர வருமானம் குறித்து நாடாளுமன்றத்துக்குத் தவறான தகவல்களை அளித்ததாக ரயில்வே நிர்வாகம் மீது குற்றச்சாற்று வைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது என்பதை ரயில்வே வாரிய தலைவரும் ஒப்புக்கொண்டுள்ளார். ரயில்வே துறை தாக்கல் செய்த ஆவணங்களை நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலித்தபோது தவறான தகவல்கள் அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
மக்களவையில் 2007-08 ஆண்டுக்கான ரயில்வே மானியக் கோரிக்கை மீதான நடவடிக்கை அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள், தகவல்கள் தவறில்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று நிலைக் குழு அறிவுறுத்தி உள்ளது.