நந்திகிராம் : மாநிலங்களவையில் பா.ஜ.க. -மார்க்சிஸ்ட் காரசாரமான விவாதம்!
வியாழன், 22 நவம்பர் 2007 (18:26 IST)
நந்திகிராம் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று நடந்த விவாதத்தின் போத ு, மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.க.தெரிவித்த கருத்துகளுக்கு மார்க்சிஸ்ட் தரப்பு உடனடியாக மறுப்புத் தெரிவித்து அதிரடியாக பதிலளித்ததால் அவையில் பரபரப்பு நிலவியது. மாநிலங்களவை இன்று கூடியவுடன் நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விவாதத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ ், மார்க்சிஸ்ட்டுகளின் மீது கடுமையான குற்றச்சாற்றுகளைக் கூறினார். ''நந்திகிராமில் விவரிக்க முடியாத வன்முறை வெடித்துள்ளது. பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். எனவே மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியையும் நிவாரணத்தையும் வழங்க வேண்டும். குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும்.'' என்று சுஷ்மா வலியுறுத்தினார். ''மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் நேற்று அரசியல் சட்டப்பிரிவு 355 -ன் கீழ் சில உத்தரவுகளை வழங்கிய பிறகும ், அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை வெளியேற்றும் முயற்சியில் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. எனவே மத்திய அரசின் உத்தரவுக்குக் கட்டுப்படாத மேற்கு வங்க மாநில அரசைக் கலைக்க வேண்டும். அதற்கும் மேலா க, மாநிலங்களவையில் நந்திகிராம் வன்முறைகளைக் கண்டித்து உடனடியாகத் தீர்மானம் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றவேண்டும ்'' என்றார் சுஷ்மா. மேலும ், கடந்த ஜனவர ி, மார்ச ், நவம்பர் மாதங்களில் நந்திகிராமில் நடந்த மூன்று வன்முறைகளில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. குற்றவாளிகளாகவும ், நீதிபதிகளாகவும் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் இருந்து அம்மக்களுக்கு நீதி கிடைக்காத ு. மார்ச் மாதம் நடந்த துப்பாக்கிச் சூடு தற்காப்பிற்காக நடத்தப்பட்டது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால் அந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒரு காவலர் கூடக் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்பாவிகள்தான் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். நந்திகிராமில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் சொல்லும் அதே நேரத்தில்தான ், மத்தியப் படைகளுக்கு மாநில அரசிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று மத்திய ரிசர்வ் காவல் படையின் இயக்குநர் குற்றம்சாற்றியுள்ளார் என்பதைக் கவனிக்க வேண்டும் என்றும் சுஷ்மா குறிப்பிட்டார். வன்முறைகளுக்கு மாவோயிஸ்டுகள்தான் பொறுப்ப ு: ச ீத ்தாராம் யெச்சூரி! சுஷ்மா சுவராஜின் இத்தகைய கருத்துகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ச ீத ்தாராம் யெச்சூரி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். நந்திகிராமில் நடந்த வன்முறைகளுக்கு மாவோயிஸ்டுகள்தான் காரணம் என்று மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா அரசு கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். மாவோயிஸ்டுகள் அரசுக்கு எதிராகப் புனிதப் போர் நடத்தி வருகிறார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதிகள ், ஆர்.எஸ்.எஸ்., திரிணாமுல் காங்கிரஸ ், வெளிநாட்டு நிதியுதவி பெறுகின்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை அரசியல் ஆதாயத்திற்காக அவர்களுக்கு உதவி செய்கிறார்கள் என்றார் யெச்சூரி. மாவோயிஸ்டுகள் தாக்கியபோது மார்க்சிஸ்ட் கட்சியின் தொண்டர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் வன்முறையில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியது தற்காப்புக்காகத்தான். அதில் கொல்லப்பட்டவர்களில் 6 பேர் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள ்'' என்று அவர் தெளிவுபடுத்தினார். நந்திகிராமில் நிலவும் சூழலை மட்டும் கருத்தில் கொண்டு மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடியாது. மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள ், இடது முன்னணி அரசு ஆகியோருக்கு எதிராகப் போராடி வரும் மாவோயிஸ்டுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மாவோயிஸ்டுகளுக்கு மார்க்சிஸ்டுகள் ஆதரவ ு? சுஷ்மா கேள்வி! யெச்சூரியின் கருத்துகளுக்கு சுஷ்மா சுவராஜ் மீண்டும் மறுப்புத் தெரிவித்தார். ''கடந்த மார்ச் மாதம் நந்திகிராமில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். கட்டுப்படுத்த முடியாத வன்முறையில் பல பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இதற்கு மாவோயிஸ்டுகள்தான் காரணம் என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறுகிறது. அப்படியானால ், நந்திகிராம் விவகாரத்தில் தொடர்புடைய வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன என்று தெளிவுபடுத்த வேண்டும ்'' என்று சுஷ்மா கோரிக்கை விடுத்தார். ''மற்ற மாநிலங்களில் நக்சலைட்டுகள் சமூகம ், பொருளாதாரம் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூற ி, அவர்களை அடக்க மத்திய அரசு படைகளை அனுப்பியுள்ளது. மேற்கு வங்கத்தில் ஏன் அப்படியொரு நடவடிக்கை எடுக்கவில்லை. நேபாளத்திற்குச் சென்ற யெச்சூரி மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகப் பேசினார். ஆனால ், மேற்குவங்க வன்முறைகளுக்கு ஜார்கண்ட் மாவோயிஸ்டுகள்தான் காரணம் என்கிறார ்'' என்று அவர் சுட்டிக்காட்டினார். ''நந்திகிராமிற்கு நான் 3 முறை சென்றுள்ளேன். அங்கு வசிக்கும் பாதிக்கப்பட்ட பெண்கள் பேசவே தயங்குகின்றனர். தங்களைத் தாக்கியவர்களைக் காட்டிக் கொடுத்தால் மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்களால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று அவர்கள் பயப்படுகின்றனர். நந்திகிராம் வன்முறைகள் மாநில ஆளுநரைக் கூட பாதித்துள்ளது. கொல்கத்தா நீதிமன்றம ், மார்க்சிஸ்ட் கட்சியை ஆதரிக்கும் படைப்பாளிகள் என பல்வேறு தரப்பினரும் நந்திகிராம் வன்முறைகள் தொடர்பாகத் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர்.'' என்றார் சுஷ்மா. மாவோயிஸ்டுகள் தேசத்திற்கே அச்சுறுத்தலாக உள்ளனர ்: யெச்சூரி! மார்க்சிஸ்டுகளை ஆதரிக்கும் படைப்பாளிகள் நந்திகிராம் வன்முறைகள் தொடர்பாக மார்க்சிஸ்டுகளைக் கண்டிக்கின்றனர் என்ற கருத்துகளை யெச்சூரி மறுத்தார். ''அவர்கள் மார்க்சிஸ்டுகளை ஆதரிக்கும் படைப்பாளிகள் அல்ல. ஜனநாயகமான முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ள மேற்கு வங்க அரசைக் கலைப்பதற்காக ஒன்று சேர்ந்துள்ள 'இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள ், ஆர்.எஸ்.எஸ்., அயல்நாட்டு நிதியுதவி பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள ்' ஆகியவற்றின் ஆதரவாளர்கள்தான் அவர்கள். மாவோயிஸ்டுகள் தேசத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூட கூறியுள்ளார். நந்திகிராமில் மாவோயிஸ்டுகள் பதுங்கியுள்ளனர் என்பதை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர ், மத்திய உளவுத் துற ை, மத்திய ரிசர்வ் காவல்படையினர் என அனைவரும் உறுதிப்படுத்தியுள்ளனர். மாவோயிஸ்டுகள் நாட்டுக்கு நீண்ட காலமாக அச்சுறுத்தலாக உள்ளனர். எனவ ே, சில்லரை ஆதாயத்திற்காக நந்திகிராம் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம ்'' என்றார் யெச்சூரி.
செயலியில் பார்க்க x