வாழ்வதற்கு ஊனம் ஓ‌ர் தடையே இல்லை!

Webdunia

செவ்வாய், 20 நவம்பர் 2007 (17:24 IST)
வாழ்க்கையில் உடல்-ஊனம் ஓ‌ர் தடையே இல்லை என்பதை இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்காது கேளாத 8 இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையின் மூலம் நிரூபித்துள்ளன‌்.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தங்கள் கிராமத்தில் இருந்து கொண்டே கங்கரா வகை பெயிண்டிங் தயாரித்தல், வாழ்த்து அட்டை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதன் மூலம் கிடைக்கும் வருவாயில் அவர்களின் குடும்ப வருமானத்துக்கு தங்களால் முடிந்த வரை சம்பாதித்து கொடுக்கின்றனர்.

22 வயது முதல் 26 வயதுக்கு உட்பட்ட 8 பேரில் 3 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2001 -ம் ஆண்டு கங்கரா மாவட்டத்தில் சின்மையா கிராமப்புற வளர்ச்சி அமைப்பு என்ற சுயஉதவிக் குழு உருவாகும் வரை அங்குள்ள ஊனமுற்ற குழந்தைகளை பெற்றெடுத்தவர்களின் நிலை பரிதாபமான நிலையில் தான் இருந்தது.

சின்மையா பிரையாஷ் என்ற அமைப்பு தொடங்கப்பட்டு 12 காது கேளாத இளைஞர்களுக்கு கங்கரா வகை பெயிண்டிங் பயிற்சி அளிக்கப்பட்டது. தர்மசாலாவில் உள்ள கங்காரா ஆர்ட் கேலரி ஒரு வருட காலம் இந்த பயிற்சியை அவர்களுக்கு வழங்கியது. இந்த 12 பேரில் 6 பேர் பள்ளிக்கு செல்பவர்கள். பள்ளி முடிந்த பின்னரும் அவர்கள் 6 பேரும் கங்காரா பெயிண்டிங்கை தொடர்ந்து முறையாக கற்று வருகின்றனர்.

இந்த குழுவில் இருந்து 4 பேர் தனியாக வந்து வெல்டிங்,மரவேலை உள்ளிட்ட பணிகளை செய்வதற்காக கடை ஒன்றைத் தொடங்கி வருவாய் ஈட்டத் தொடங்கியதைத் தொடங்கியுள்ளனர்.

தொடக்க காலத்தில் இந்த மையத்துக்கு, தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்த பெற்றோர்களின் ஊனமுற்ற குழந்தைகள், தற்போது பெயிண்டிங் கலையை கற்றது மூலம் வருவாய் ஈட்டத் தொடங்கியுள்ளனர் என்று கோர்டு தேசிய இயக்குநர் முனைவர் காஷ்மா மெட்ரே கூறினார். இவர்களின் தயாரிப்புகள் ருபாய் 600 முதல் 3,000 வரை உள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு 72,000 வாழ்த்து அட்டைகளை அச்சிடுவதற்காக வங்கியில் ரூபாய் 62,000 கடனாக பெற்றதை அந்த ஆண்டு இறுதியிலேயே திருப்பிச் செலுத்தியுள்ளனர். படிப்படியாக இந்த இளைஞர்களின் திறமையை தற்போது மிகப் பெரிய அளவில் மக்கள் அங்கீகரித்து வருவதாக காஷ்மா மெட்ரே கூறினார்.

கடந்த வாரம் இவர்களின் கலைவண்ணங்கள் கனடா இல்லத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டது என்றுகூறினார். அங்கு வந்திருந்த கனடா தூதர் டேவிட் எம் மெலோனி 12 கலைப் படைப்புகளை வாங்கினார். அவற்றில் சிலவற்றை பிரான்சிலும் மற்ற நாடுகளில் உள்ள நண்பர்களுக்கு வழங்கப் போவதாக தூதர் டேவிட் எம் மெலோனி கூறினார்.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கோர்டு மையத்துக்கு சென்றிருந்த போது, சிவானிக்கின் ஓவியங்களைப் பார்த்து உண்மையிலேயே வியந்து போனதாகவும், அவை அந்த அளவுக்கு அழகாக இருந்தன என்றும் டேவிட் எம் மெலோனி கூறினார்.

அந்தக் கணமே இந்த இளைஞர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தமது மனம் அறிவுறுத்தியதாக தெரிவித்தார். தற்போது தமக்கு இந்த குழுவில் உள்ள 8 பேரின் திறமைகளும் தெரியும் என்றும் அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்