இந்நிலையில் இன்று காலை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு முன்பு மதசார்பற்ற ஜனதா தள சட்டப் பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தின் முடிவில் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாத பா.ஜ.க.வுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா,"எங்கள் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே எடியூரப்பா வெளியேற்றப்படுகிறார்'' என்றார்.
இதையடுத்து கருத்து தெரிவித்த பா.ஜ..க. தலைவர் ராஜ்நாத் சிங், மதசார்பற்ற ஜனதா தளத்தின் காலடியில் சரணடைய முடியாது என்று கடுமையாகக் கூறினார். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் முன்னரே, ஆளுநரைச் சந்தித்து தனது அமைச்சரவையின் பதவி விலகல் கடிதத்தை அளித்தார். பா.ஜ.க. ஆட்சி ஏற்படாத நிலையை அடுத்து கர்நாடகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தப்படுவது உறுதியாகிவிட்டது.