மே‌ற்குவ‌ங்க அரசை‌க் கலை‌க்க வே‌ண்டு‌ம்: அ‌த்வா‌னி

Webdunia

புதன், 14 நவம்பர் 2007 (13:27 IST)
ச‌ட்ட‌ம் ஒழுங்கு ‌சீ‌ர்குலை‌ந்து ‌வி‌ட்டதா‌ல் மே‌ற்கு வ‌ங்க அரசை‌க் கலை‌த்து‌வி‌ட்டு குடியரசு தலைவ‌ர் ஆ‌ட்‌சியை‌க் கொ‌ண்டுவர வே‌ண்டு‌ம் எ‌ன்று பா.ஜ.க.‌வி‌ன் மூ‌த்த தலைவ‌ர் எ‌ல்.கே. அ‌த்வா‌னி கூ‌றியு‌‌‌ள்ளா‌ர்.

ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல் வ‌ன்முறை நட‌ந்த இட‌‌ங்க‌ளி‌ல் பா.ஜ.க. தலைமை‌யிலான தே‌‌சிய மு‌ற்போ‌க்கு‌‌க் கூ‌ட்ட‌ணி‌யி‌ன் தலைவ‌ர்க‌ள் நே‌ரி‌‌ல் ஆ‌ய்வு செ‌ய்தன‌ர். ‌பிறகு அவ‌‌ர்க‌ள் மே‌ற்குவ‌ங்க மா‌நில ஆளுந‌ர் கோபால ‌கி‌ரு‌ஷ்ண கா‌ந்‌தியை‌ச் ச‌ந்‌தி‌த்து‌ப் பே‌சின‌ர். ‌

அத‌ன்‌பி‌ன்‌ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த பா.ஜ.க.‌வி‌ன் மூ‌த்த தலைவ‌ர் எ‌ல்.கே.அ‌த்வா‌னி, நாக‌ரீக சமுதாய‌த்‌தி‌ல் யாரு‌ம் ஏ‌ற்று‌க்கொ‌ள்ள முடியாத, ‌நினை‌த்து‌‌ப் பா‌ர்‌க்க முடியாத வ‌ன்முறைக‌ள் ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல் நட‌ந்து‌ள்ளன. எனவே மே‌ற்கு வ‌ங்க‌த்‌தி‌ல் ஆளு‌‌ம் இடது மு‌ன்ன‌‌ணி‌யி‌ன் ஆ‌ட்‌சியை உடனடியாக‌க் கலை‌த்து‌வி‌ட்டு குடியரசு தலைவ‌ர் ஆ‌ட்‌சியை அம‌ல்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்