மகளிர் இட ஒதுக்கீடு பிரச்சனையில் ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சியாக ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் தலைவரும் மத்திய ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இன்று சந்தித்தனர்.
வருகின்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மகளிர் இட ஒதுக்கீட்டு சட்ட மசோதாவைத் தாக்கல் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் லாலு உறுதியளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் எம்பியுமான பிருந்தா காரத், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மகளிருக்கான இட ஒதுக்கீட்டுச் சிக்கலுக்குத் தீர்வுகாண காலம் தாழ்த்தி வருகிறது என்று குற்றம்சாற்றியதுடன், இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை ஓயப்போவதில்லை என்று கூறினார்.