தீபாவளி பரிசு ரூ.2,000 கோடி!

Webdunia

திங்கள், 5 நவம்பர் 2007 (16:20 IST)
தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்திய நிறுவனங்கள் ரூ.2,000 கோடி மதிப்புள்ள பொருட்களை பரிசாக வழங்க போகின்றன.

தீபாவளி பண்டிகைக்கு உற்றார் உறவினர், நண்பர்களுக்கு புது ஆடைகள், இனிப்பு வகைகள், பட்டாசு ஆகியவை பரிசுப் பொருட்களாக கொடுப்பது ஆண்டாண்டு காலமாக தொன்று தொட்டு கடைப்பிடிக்கும் பழக்கமாக உள்ளது. மற்ற வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகையின் போது பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்த வருடம் இந்தியாவில் உள்ள தொழில், வர்த்தக நிறுவனங்களின் வருவாய் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இவை தங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் முதல் அன்றாடம் தொடர்பு கொள்ளும் கடைநிலை ஊழியர்கள் வரை தீபாவளி பரிசு வழங்குகின்றனர்.

இதே போல் தங்கள் நிறுவனங்களுக்கு கச்சா பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள், நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் விநியோகஸ்தர்கள், அதிகாரிகள் உட்பட பலருக்கு தீபாவளி பரிசுகளை வழங்குகின்றனர்.

இந்தியாவில் உள்ள தொழில், வர்த்தக நிறுவனங்கள் சென்ற ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது சுமார் ரூ. 1,300 கோடி மதிப்புள்ள பொருட்களை பரிசாக வழங்கி உள்ளன. இந்த வருடம் ரூ.2,000 கோடிக்கு வழங்கவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது அசோசெம் “ என்று சுருக்கமாக அழைக்கப்படும் அசோசியேடட் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்டிரிஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் இருந்து தெரியவநதுள்ளது.

இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்களிடம் இருந்து பெற்ற தகலவல்களில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு பரிசு வழங்குவது, சென்ற வருடத்தை விட 48 விழுக்காடு அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது. அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனால் ஏற்றுமதி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வெளிநாட்டு வங்கி, நிதி நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கிய நிறுவனங்கள் இலாபம் அடைந்துள்ளன. டாலர் மதிப்பு குறைந்ததால் இவை திருப்பி செலுத்தும் தொகை குறைந்துள்ளது..

அத்துடன் இந்த நிதியாண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டில் இலாப - நஷ்ட அறிக்கையின் படி பெரும்பாலான நிறுவனங்களின் வருவாய் அதிகரித்துள்ளது. இவை எவ்வித நிதி நெருக்கடிகளையும் சந்திக்க வில்லை. இவற்றின் பணப்புழக்கமும் தாராளமாக இருக்கின்றது.

இது போன்ற காரணங்களினால், தீபாவளி பரிசு வழங்குவதில் எல்லா நிறுவனங்களும் தாராள மன்ப்பான்மையை கடைப்பிடிக்கின்றன.

இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் டி. எஸ். ரவாட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி, (இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள நிறுவனங்களிடம் எடுத்த கணக்கின்படி) மருந்து உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், அயல் அலுவலக பணி, நுகர்வோர் பொருட்கள், ரியல் எஸ்டேட், சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து நிறுவனங்கள் ரூ.160 கோடி மதிப்பிற்கு தீபாவளி பரிசுப் பொருட்களை வழங்க ஒதுக்கியுள்ளன என்று அறிவித்துள்ளது.

தீபாவளி பரிசுப் பொருட்களாக தங்கம், வெள்ளி நாணயங்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரம், வெள்ளி மற்றம் பித்தளை சிலைகள், அழகான மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகள், கோட் துணிகள், ஐ.போட், டி.வி.டி பிளேயர், பாரசீக தரை விரிப்புகள் உட்பட பல பொருட்களை வழங்க உள்ளன.

இவை ரூ.2,000 கோடி செலவிட்டு பரிசு வழங்க காரணம், இவை செலவு என்று கருதாமல், எதிர்காலத்தின் வளர்ச்சிக்கான முதலீடாகவே கருதுகின்றன. பரிசுப் பொருட்கள் வழங்குவதால் ஊழியர்களிடத்திலும், வர்த்தக தொடர்பு உள்ளவர்களின் மத்தியில் இவைகளின் மதிப்பு உயர்கிறது, வர்த்தக தொடர்புகளும் பலப்படுகிறது.

பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு பரிசு வழங்குவது தவறாக கருதப்படுவதில்லை. இது பராம்பரியமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையே. இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் தீபாவளி என்பது வர்த்தக சமுதாயத்திற்கு புது வருடம் மாதிரியானது. அன்று புது கணக்கு தொடங்குவார்கள். இந்த சந்தர்ப்பத்தில் பழைய வாடிக்கையாளர்கள், தொடர்புகளை உறுதிப் படுத்திக் கொள்ளவும், புதிய தொடர்புகளை உண்டாக்கிக் கொளளவும் பரிசு பொருட்களை வழங்குகின்றனர். இவை பரிசு மட்டும் அல்ல, தங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் படியும், எதிர்காலத்தில் உறவு தொடர்வதற்கான அடையாளமாக பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

முன்பு இருந்ததை விட இப்போது எல்லா துறையிலும் போட்டி அதிகமாகியுள்ளது. இந்த போட்டிகளுக்கு இடையே, தொழில், வர்த்தக நிறுவனங்கள் அவைகளின் வாடிக்கையாளர்கள், வர்த்தக தொடர்புகளை இழக்காமல் பாதுகாக்க வேண்டியதுள்ளது.

அத்துடன் பண்டிகை சமயங்களில் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி உற்பத்தியில் ஈடுபட்டு நிறுவனங்கள் கவர்ச்சிகரமான பரிசு பொருட்களை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்த்து விற்பனையை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகி்ன்றன.

தீபாவளி பரிசாக ரூ. 300 முதல் ரூ. 20,000 வரை மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக கடவுள் உருவம் பதித்த தங்கம, வெள்ளி நாணயங்கள், குத்து விளக்கு ஆகிய மங்களகரமான பொருட்கள் வழங்கப்படுகின்றன. பரிசாக வழங்கும் விலை உயர்ந்த பேனா முதல் மணிபர்ஸ் போன்ற சொந்த உபயோகத்திற்கான பொருட்கள், பரிசு பெறுபவரின் பெயரை பதித்து வழங்குகின்றன. இதன் மூலம் பரிசு என்பது சம்பிராதயமாக இல்லாமல், தனிப்பட்ட மகிழ்ச்சிக்காகவும் வழங்கப்படுகின்றன.

























குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. உயர்தரமான கண்ணைக் கரவரும் பல்வேறு வகைப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்