சபரிமலை கோயிலில் செல்பேசிக்குத் தடை

Webdunia

ஞாயிறு, 4 நவம்பர் 2007 (12:27 IST)
சபரிமலை ஐயப்பன் கோயிலில் செல்பேசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோயிலைச் சுற்றி செல்பேசியைச் செயலிழக்க செய்யும் கருவிகளும் பொருத்தப்பட உள்ளன.

சபரிமலையில் `மகர ஜோதி' தரிசனத்திற்காக ஆலயம் திறக்க இன்னும் இரண்டு வாரங்களே இருக்கின்றன. இதனால் சபரிமலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் பம்பையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், சபரிமலை கோவில் வளாகத்தில் செல்பேசிகள் பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. செல்பேசியை செயல் இழக்கச் செய்யும் ஜாமர் என்ற கருவிகளும் கோயிலைச் சுற்றி பொருத்தப்பட உள்ளன.

இது தவிர பம்பை மற்றும் சபரிமலையில் கூடுதலாக 20 விழுக்காடு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தவும் தீர்மானிக்கப்பட்டது. சபரிமலையில் மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக பம்பா நதியின் குறுக்கே மூன்று தடுப்பு அணைகள் கட்டப்பட உள்ளன.

பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக 248 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முதன் முறையாக கட்டண கார் அறிமுகமாகிறது என்பது உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்