தங்கம் வெள்ளி விலை குறைந்தது

Webdunia

வியாழன், 25 அக்டோபர் 2007 (12:01 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று காலை பார் வெள்ளி கிலோவுக்கு ரூ. 15, 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 15 குறைந்தது.

டோக்கியோ சந்தையில் தங்கத்தின் விலை அ‌திகரிக்கவில்லை. சென்ற வாரம் நியூயார்க் சந்தையில் விலை குறைந்தது. இப்போது விலை பழைய நிலைக்கு திரும்பிவிட்டது.

சென்ற செவ்வாய் கிழமை நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 6 டாலர் அதிகரித்தது. சென்ற வாரம் 1 அவுன்ஸ் 750 டாலராக குறைந்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து நிலவும் பதட்டத்தால் தங்கத்தில் செய்யப்படும் முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாக தங்கத்தின் ‌விலை சென்ற வாரம் சர்வதேச சந்தையில் உயர்ந்தது.

இன்று காலை விலை நிலவரம்.

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9, 785
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9, 735
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ.18,255

வெப்துனியாவைப் படிக்கவும்