ர‌யி‌ல்வே ‌த‌னியா‌ர்மய‌ம் இ‌ல்லை : ஆர். வேலு!

Webdunia

வியாழன், 18 அக்டோபர் 2007 (14:05 IST)
பொதுத்துறை நிறுவனமான ரயில்வே ‌நி‌ர்வாக‌ம் தனியார்மயம் செய்யப்பட மாட்டாது என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.

அகில இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த அவர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், ''ரயில்வே ‌நி‌ர்வாக‌த்தை தனியார்மயம் செய்வது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. பிரிட்டிஷ் அரசு ரயில்வேத் துறையை தனியார்மயம் செய்தது. பின்னர் சேவைகள் மற்றும் பராமரிப்பில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக பொதுத்துறைக்கே மீண்டும் மாற்றியது.

அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் பொதுத்துறை-தனியார் ஒத்துழைப்புடன் நாட்டில் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும். நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கூட்டு ஒப்பந்தங்கள் மூலம் திட்டங்களை ரயில்வே மேற்கொள்ளும். கூட்டு ஒப்பந்தத்தில் பங்கேற்க மேற்குவங்கம், ஹரியானா, பஞ்சாப் உ‌ள்‌ளி‌ட்ட சில மாநிலங்கள் ஆர்வம் காட்டிவருகின்றன.

லூதியானா-கொல்கத்தா, டெல்லி-மும்பை இடை‌யிலான 3000 கி.மீ. இரு‌ப்பு‌ப் பாதை பொதுத்துறை-தனியார் கூட்டு ஒத்துழைப்புடன் அமை‌க்க‌ப்பட உள்ளது. இதற்காகும் செலவு ரூ.30 ஆயிரம் கோடி'' என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்