கர்நாடக வனப்பகுதியில் தந்தம் திருட்டு

Webdunia

வியாழன், 11 அக்டோபர் 2007 (11:34 IST)
கர்நாடகா வனப்பகுதியில் கடந்த ஒரே மாதத்தில் ஒன்பது யானைகளை கொன்று தந்தம் கொள்ளையடிக்கப்பட்டது தமிழக வனத்துறை மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி, கேர்மாளம் வனப்பகுதியை அடுத்துள்ளது சாம்ராஜ்நகர் மற்றும் கொள்ளேகால் வனப்பகுதி. இது கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட பகுதிகளாகும். இந்த வனப்பகுதியில் காட்டயானைகள் அதிகமாக வாழ்ந்து வருகிறது. குறிப்பாக காவிரி ஆற்றின் படுகையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் காட்டயானைகள் அதிகமாக வசிக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஆண் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது கர்நாடக வனப்பகுதியில் யானைகளை கொன்று தந்தங்கள் திருடும் புதிய கும்பல் ஒன்று ஊடுருவியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் கர்நாடக வனப்பகுதியில் ஒன்பது ஆணயானைகளை கொன்று தந்தங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இதன் எதிரொலியாக தமிழக வனத்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். தமிழக வனப்பகுதிகளாக கடம்பூர், தாளவாடி, கேர்மாளம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரோடு மண்டல வனபபாதுகாவல் துரைராசு உத்திரவின்பேரில் சத்தியமங்கலம் மாவட்ட வஅதிகாரி எஸ்.ராமசுப்பிரமணியம் தலைமையில் ரேஞ்சர்கள் சுந்தரராஜன், மோகன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் தமிழக வனப்பகுதியில் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்