கர்நாடக மாநில சட்டசபையை கலைக்குமாறு ஆளுநர் ரமேஷ்வர் தாகூர் அனுப்பிய பரிந்துரையை குடியரசுத் தலைவர் பெற்றுக் கொண்டார்.
இந்த பரிந்துரை அரசின் பரிசீலனையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று மாலையில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆளுநரின் பரிந்துரை பற்றி விவாதிக்கப்படும்.
குடியரசுத் தலைவருக்கு மத்திய அமைச்சரவை கர்நாடக சட்டசபையை கலைக்கும் படி பரிந்துரைக்கும்.
அதன்படி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், கர்நாடக சட்டசபையை கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்வதற்கான உத்தரவை பிறப்பிப்பார்.
மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு அளித்து வந்த ஆதரவை, நேற்று பாரதிய ஜனதா திரும்ப பெற்றது. இதனால் குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. இதைத் தொடர்ந்து நேற்று குமாரசாமி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.