இதுபற்றி டெல்லியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வியிடம் கேட்டபோது, கர்நாடக மாநில அரசியல் நிலைமை எதிர்பாராத, வெளிப்படையற்ற தன்மையை அடைந்திருப்பதாகவும், ம.ஜ.த. - பா.ஜ.க. கூட்டணி அரசுக்கு வாக்களித்த மக்கள், ஊழல், மோசமான ஆட்சியால் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறினார்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்க தயாராகி விட்டதாகவும், உரிய நேரத்தில் தகுந்த முடிவை காங்கிரஸ் எடுக்கும் என்றும் அவர் கூறினார். 18-ஆம் தேதி சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது தொடர்பாக அவர் எதையும் தெரிவிக்கவில்லை.
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 48 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 60 உறுப்பினர்கள் உள்ளனர்.