இந்திய வரைபடம் சி.டி.யில் வெளியீடு!

Webdunia

வியாழன், 4 அக்டோபர் 2007 (20:07 IST)
சென்னையைச் சேர்ந்த டி.ி.ே. மேப்ஸ் நிறுவனம் இந்திய வரை படத்தை குறுந்தகட்டில் வெளியிட்டுள்ளது.

ி.ி.ே. ஹெல்த்கேர் நிறுவனத்தின் பிரிவான டி.ி,கே மேப்ஸ், இந்தியாவின் பல நகரங்களை தெளிவாக காணும் வகையில் இந்தக் குறுந்தகடு வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியாவைப் பற்றிய விபரங்கள் அடங்கிய 700 படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் பொதுவான வரைபடம், பூகோள ரீதியான வரைபடம், மாநில எல்லைகளை காட்டு்ம் வரைபடம் என பல பிரிவுகளில் வரைபடங்கள் அடங்கியுள்ளன.

ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த நகரங்கள், தொன்மையான நாகரீகத்தை எடுத்துக் காட்டும் இடங்கள், சுற்றுலா தலங்கள், விவசாயம், மக்கள் தொகை, போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் அடங்கியுள்ளன.

இதில் குறிப்பிட்ட நகரின் அல்லது கிராமத்தை அடையாளம் காண வேண்டும் என்றால் சிரமப்பட்டு தேட தேவையில்லை. பிளேஸ் ஃபைன்டர் என்ற வசதியை பயன்படுத்தி சிற்றூரின் பெயரை டைப் செய்தால் போதும், அந்த சிற்றூரை கோடிட்டு காண்பிக்கும். அதை நமக்கு தேவையான அளவு பெரிதாக்கி பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு எந்த இடத்தையும் பெரிதாக்கி சிறு தெருவை கூட பார்க்கும் வசதி உள்ளது.

இதன் மற்றொரு சிறப்பம்சம், தூரத்தை கணக்கிடும் வசதி. இந்த வசதியை பயன்படுத்தி ராமேஸ்வரத்திற்கும், அயோத்திக்கும் இடையே உள்ள தூரம் எத்தனை கிலோ மீட்டர் என்பதை சில விநாடிகளில் தெரிந்து கொள்ளலாம். அத்துடன் குறிப்பிட்ட ஊருக்கு அருகில் உள்ள பெரிய நகரம் அல்லது மாவட்ட தலைநகரம் எது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் உள்ள எல்லா ஊர்களின் எஸ்.ி.ி. எண் ( உள் நாட்டு நேரடி தொலை பேசி ) ஐ.எஸ்.ி. ( அயல்நாட்டு நேரடி தொலை பேசி ) எண்களையும் தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது. இது போன்றே கடிதங்களில் அவசியம் குறிப்பிடவேண்டிய குக்கிராமம் முதல் பெரிய நகரத்தில் உள்ள இடங்கள் வரை பின்கோடு எண்ணையும் கண்டுபிடிக்கும் வசதி உள்ளது.

இது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை, ி.ி.ே. ி.டி மேப்பில் இந்தியாவை பற்றிய பூகோள அறிவு, வரலாறு, கலாச்சாரம் உட்பட பல்வேறு விபரங்களை எளிய வழியில் தெரிந்து கொள்ளும் வசதிகள் அடங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்