தமிழக அரசுக்கு ஆட்சியுரிமை இல்லை : பாஜக

Webdunia

திங்கள், 1 அக்டோபர் 2007 (20:04 IST)
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால், ஆட்சியில் நீடிப்பதற்கான சட்டபூர்வமான உரிமையை தமிழக அரசு இழந்துவிட்டது என்று பாஜக கூறியுள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் இராஜ்நாத் சிங், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குலைந்து விட்டது. எனவே திமுக அரசுக்கு ஆட்சியிலிருக்கும் உரிமையில்லை" என்றார்.

மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சனம் செய்த மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை பதவியைவிட்டு நீக்கவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக சென்னையில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பாலு, நீதித்துறை அதன் எல்லைக்குள் நிற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஒவ்வொரு நீதிபதியும் சரியாக இருந்தால், மேல் முறையீடுகள் எதற்கு? உயர் அமர்வுகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏன் ஏற்படுகிறது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்