காஷ்மீரில் குண்டுவெடிப்பு தவிர்க்கப்பட்டது

Webdunia

ஞாயிறு, 30 செப்டம்பர் 2007 (15:42 IST)
தெற்கு காஷ்மீர்ப் பகுதியில் வெடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கிரானெட் குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கம் செய்யப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தெற்கு காஷ்மீரின் கோயில் நகரமான மதன் அருகே உள்ள கேஹ்ரிபால் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் கண்ணி வெடி ஒன்று புதைக்கப்பட்டிருப்பதை கண்டறிற்தனர்.

உடனடியாக அப்பகுதி சீலிடப்பட்டு வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் படையினர் விரைந்து வந்து வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர்.

இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்