ஹைதராபாத் குண்டு வெடிப்பு: மேலும் 4 பேர் கைது

Webdunia

ஞாயிறு, 9 செப்டம்பர் 2007 (12:26 IST)
ஹைதராபாத் 44 பேர் கொல்லப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு இப்படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அப்துல் சத்தார் என்பவரிடம் நடத்திய விசாரணையை அடுத்து மொஹம்மது அப்துல் வாஹி, டாக்டர் இப்ராஹிம் அலி ஜூனாயத் ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்கள் நால்வரும் நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் முகவர் என்று கூறப்படும் அப்துல் சத்தார் விசாரணை அளித்த தகவலின் அடிப்படையில் புனிதப் போரில் ஈடுபடத் தூண்டும் நான்கு குறுந்தகடுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அப்துல் சத்தார் என்கின்ற அன்னு என்கின்ற அந்தர் கடந்த ஜூன் மாதம் செகந்த்ரா பாத் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவனிடம் நடத்திய விசாரணையில் 2004ஆம் ஆண்டு பாகிஸ்தானில் அவன் ஆயுதங்களைப் பயன்படுத்தவும் வெடிகுண்டுகளைத் தயாரிக்கவும் பயிற்சி பெற்றது தெரிய வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்