1993 மும்பை குண்டு வெடிப்பில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட டைகர் மேமன் குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால பிணைய விடுதலை வழங்கியுள்ளது.
மும்பையில் 1993 ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற டைகர் மேமன் குடும்பத்தினர் மூபினா (எ) பாயா மூசா, யூசுப் அப்துல் ரசாக் மேமன், ரூபினா சுலேமான் மேமன், அஞ்சும் அப்துல் ரசாக் மேமன் ஆகியோர் பிணைய விடுதலை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத், பி.சதாசிவம் ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு, 4 பேருக்கும் இடைக்கால பிணைய விடுதலை வழங்கியது. மும்பை தடா நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்கள் கிடைத்ததும் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.