44 பேர் கொல்லப்பட்ட ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பாகவும், வங்கதேசத்தில் இருந்து ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் கடத்தி வந்தது தொடர்பாகவும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது!
ஹைதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இம்ரான் கான், கலீம் என்கின்ற ரஃபீக்கிடம் பெங்களூரில் நேற்று நடத்தப்பட்ட நார்கோ அனாலிசஸ் சோதனையின் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக ஹைதராபாத் காவல் ஆணையர் பல்விந்தர் சிங் கூறினார்.
இவர்கள் அனைவரும் நீதிதமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டு இரண்டு வார நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் ஹைதராபாத் காவல் ஆணையர் பல்விந்தர் சிங் கூறினார்.
ஹைதராபாத் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்த தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு காவல்துறை குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆணையர் பல்விந்தர் சிங் கூறினார்.